பரோட்டா பிரியர்களா நீங்கள்? சாப்பிட்டால் மரணத்தை தேடிச் செல்வதற்கு சமமாம்
பரோட்டா அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பரோட்டா
இன்றைய மக்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் உணவு பரோட்டா. இது உடம்பிற்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் இதன் சுவையில் மக்கள் மயங்கி இருக்கின்றனர்.
பரோட்டா, மைதாவின் இருந்து தயாரிக்கப்படுவதால், செரிமான மண்லத்தில் ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் செரிமான உறுப்புகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.
கோதுமையில் இருந்து மைதாவை பிரித்தெடுக்க, ’பென்சாயில் பெராக்சைடு’ என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வேதிப்பொருளானது தலைமுடிக்கு அடிக்கப்படும் டையில் கலக்கப்படுவது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிறிதளவு கூட நார்ச்சத்து இல்லாத பரோட்டாவை சாப்பிடுவது மலச்சிக்கலை ஏற்படுத்துவதுடன், இரவு நேரத்தில் இதனை சாப்பிடுவது மரணத்தை தேடி செல்வதற்கு சமமாம்.
பரோட்டா, அதற்கு ஊற்றப்படும் சால்னா இவற்றில் அஜினமோட்டோ அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இவை சுவைக்காக சேர்க்கப்படுவதாக இருந்தாலும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மைதாவை தடைசெய்யப்பட்டுள்ளது. பரோட்டா மட்டுமின்றி மைதாவில் தயாரிக்கப்படும் எந்தவொரு உணவுபொருளும் உடம்பிற்கு கேடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |