சைனஸ் மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடுவது ?
ஆஸ்த்துமா இருப்பவர்கள் சைனஸ் பிரச்சனைக்கும் உள்ளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் மிகவும் தெளிவாக பார்க்க முடியும்.
ஆஸ்த்துமா சைனஸ்
நாசிப்புரையில் வீக்கம் அல்லது தொற்று காரணமாக ஏற்படுவதே சைனஸ் ஆகும். அதே சமயம் ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாய்களை வீக்கமடைந்து சுருங்கச் செய்யும் ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும்.
இது ஒன்றாக இணைந்து உடலை பாதிக்க கூடும். இது இரண்டும் ஒன்றாக இணைந்து ஒருவரை தாக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தை முற்றாக பாதிக்க கூடும். ஆஸ்த்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு கண்டிப்பாக சைனஸ் பிரச்சனை வரும்.
சைனஸ் பிரச்சனை இருந்தால், சளி தொண்டையின் வழியாக கீழிறங்கும். இது மூச்சுக்குழாய்களை எரிச்சலடையச் செய்து இருமல், மூச்சுத்திணறல் போன்ற ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டக்கூடும்.
உங்களுக்கு சைனஸ், ஆஸ்துமா அல்லது இரண்டும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய குழந்தை மருத்துவர் அல்லது ஒவ்வாமை நிபுணரை அணுகவும். சிகிச்சை பலனளிக்க வேண்டுமென்றால் துல்லியமான நோயறிதல் அவசியமாகும்.
சைனஸ் பாக்டீரியா தொற்று காரணமாக வந்திருந்தால், ஆண்டிபயாடிக் பயன்படுத்தலாம். வீக்கத்தைக் குறைக்க நாசி கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் நாசிப் பாதைகளை ஈரப்பதமாக வைத்திருக்க உப்பு நிறைந்த நாசி ஸ்ப்ரேக்களை பயன்படுத்தலாம்.
ஆஸ்துமாவை விரைவாக கட்டுப்படுத்த இன்ஹேலர்களையும் நீண்ட கால வீக்கத்தைக் கட்டுப்படுத்த கார்டிகோஸ்டீராய்டுகள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இந்த பிரச்சனை ஏற்படும் சமயத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். அலர்ஜி ஏற்படும் எந்த ஒரு விஷயத்தையும் இதன்போது செய்ய கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |