Parkinson's disease symptoms: உதறுவாதம் என்றால் என்ன? இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

Depression Immune System
By Vinoja Nov 07, 2024 12:32 PM GMT
Report

பொதுவாக முதுமையடையும் போது ஏற்படும் நோய்களில் உதறுவாதம் அல்லது தளர்வாதம் என அழைக்கப்படும் ‘பார்க்கின்சன் நோய்’ (Parkinson’s disease) பாதிப்பபு முக்கிய இடம் வகிக்கின்றது.

இந்த நோயின் தாக்கம் முன்னரை விடவும் தற்காலத்தில் அதிகதித்து வருகின்றது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் 100இல் ஒருவருக்கு இந்த நோய் தாக்கம் காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

Parkinson

தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு மற்றும் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை வெய்யும் நிலை மற்றும் தீவிர மனஅழுத்தம் காரணமாக தற்காலத்தில் சிலருக்கு நடுத்தர வயதிலும் உதறுவாதம் என்படும் வாய்ப்பு அதிகரித்து வருகின்றது. 

பார்கின்சன் நோய் எனப்படும் தளர்வாதம் தீவிரமாகி வரும் முடக்கு நரம்புச்சிதைவு நோயாகும். மெதுவாகவும், விறைப்பாகவும்,ஸ்திரமற்ற நிலையிலும் இருத்தல் போன்ற இயக்க பிரச்சனைகளை இது குறிக்கும். 

Parkinson

பார்க்கின்சன் நோய் ஏற்பட என்ன காரணம்?

Cervical Cancer: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

Cervical Cancer: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

பார்க்கின்சன் நோய் வருவதற்கான உண்மையான காரணம் இன்னும் முழுமையாக கண்டறிப்படவில்லை. 

மரபுணு தொடர்பு ,தொழிற்சாலைக் கழிவுகளும், மாசுபட்ட சுற்றுச்சூழால் ஏற்படும் பக்கவிளைவுகளும் அதிகரித்த மன அழுத்தம் பார்க்கின்சன் நோய் ஏற்பட பிரதான காரணமாக அமைகின்றது. 

Parkinson

சிறுவயதில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணும் பழக்கம் இல்லாதவர்களுக்கு முதுமையில் இந்த நோய் தாக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. 

மூளை நரம்பணுக்களில் ‘டோபமின்’ (Dopamine) எனும் வேதிப்பொருள் சுரப்பது குறைந்துவிடும்போது, உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படுவதன் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’. இது மின் ஆற்றலை இழந்துபோன பேட்டரிக்கு ஒப்பான ஒரு நிலை ஆகும். 

Parkinson

பெரும்பாலும் ‘டோபமின்’ சுரப்பு 80% குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. 

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பார்க்கின்சன் நோயை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகளுள் ஒன்று தான் ஆரம்ப கட்டத்தில்  கைகளில் ஏற்படும் நடுக்கம். 

இந்த நோய் தாக்கம் ஆரம்பிக்கும் போது தாக்கத்துக்கு உள்ளானவர்கள் எப்போதும்  உள்ளங்கைக்குள் ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு இருப்பது போன்ற செயல்களை செய்வார்கள். 

அதனை தொடர்ந்து  கை விரல்கள் ஆடிக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படும். இது தீவிரமடையும் போது இந்த நடுக்கம் கொஞ்சம்கொஞ்சமாகக் காலுக்கும் தலைக்கும் பரவ ஆரம்பிக்கும். 

Parkinson

குறிப்பாக ஓய்வாக இருக்கும்போதுதான் இந்த நடுக்கம் ஏற்படும். ஏதாவது ஒரு வேலையை செய்துக்கொண்டே இருக்கும் போது நடுக்கத்தை உணர வாப்பு இருக்காது. 

இந்த நிலை தீவிரமடையும் போது உறக்கத்தில் நடுக்கம் இருக்காது. நடுக்கம் நாக்கையும் பாதிக்கும்போது பேச்சில் மடுமாற்றம் ஏற்படும். முணுமுணுப்பதுபோல் பேசும் நிலை உருவாகும். 

மற்றவர்களுடன் கைகுலுக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். அல்லது எழுதும் போதும் கையெழுத்து போடும் போதும் கூட போராட வேண்டிய நிலையில் கைகள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். 

வாசனையை உணரமுடியாத நிலை இந்த நோய் தாக்கத்தின் முக்கிய அறிகுறியாகும்.  தசைகள் இறுகிவிடும். உடலியக்கங்கள் குறையும். உதாரணமாக, ஓரிடத்தில் உட்கார்ந்தால், நீண்ட நேரத்துக்கு அசைவுகள் அதுவும் இன்றி இருப்பார்கள்.

Parkinson

எழுந்து நிற்கும்போதும் நடக்கும்போதும், படுக்கையைவிட்டு எழும்போது தள்ளாடும் நிலை காணப்படும். அதாவது சில நொடிகள் மயக்கம் வருவது போல் உணருவார்கள். 

அடிக்கடி விழுந்துவிடுவார்கள். செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.  உண்ணும்போது, உடை உடுத்தும்போது, குறிப்பாக சட்டைகளில் பட்டன்களை போடும் போது அதிக தடுமாற்றம் ஏற்படும். 

எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும். உணவை விழுங்குவதற்கு கஷ்டப்படுவார்கள்.

Parkinson

மேலும் திடீர் உடல் எடை இழப்பு, மலச்சிக்கல் மற்றும் முழு நேர சோர்வு போன்ற ஆரோக்கிய பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். 

சிகிச்சை

பார்க்கின்சன் நோய்க்கு நரம்புநல சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் பார்க்கின்சன் நோயைப் பொறுத்தவரையில் பொதுவான சிகிச்சை பலன் தருவதில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சிகிச்சை முறை காணப்படுகின்றது.ஒருவருக்குப் பலன் கொடுக்கும்  சிகிச்சை அடுத்தவருக்குப் பலன் தரும் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. 

அவரவர் உடல் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தை பொறுத்து  சிகிச்சைக்கான பலன் கிடைக்கும். இந்த நோயை முழுவதுமாகக் குணப்படுத்த இயலாது. ஆரம்த்திலேயே அறிகுறிகளை கண்டறிந்தால், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். 

Parkinson

இந்த நோய் அறிகுறிகளை கொண்டவர்கள் கொடிமுந்திரி, ‘பெர்ரி’ பழங்கள், சைவ சூப்கள், பாதாம், வால்நட், முந்திரி, முட்டையில் வெள்ளைக் கரு, மீன், நாட்டுக்கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகளவில் உணவில் நேர்த்துக்கொள்வது நல்லது.

 அதிகக் கொழுப்புள்ள உணவு வகைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், போதியளலு தூக்கம், மன அடுத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணதல் போன்றவற்றின் மூலம் பார்க்கின்சன் நோய்க்கு தாக்கத்தை குறைக்க முடியும். 

வயதான தோற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் இந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா? உடனே நிறுத்துங்க

வயதான தோற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் இந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா? உடனே நிறுத்துங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US