வயதான தோற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் இந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா? உடனே நிறுத்துங்க
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்வில் ஒவ்வொரு பருவ நிலைகளை கடந்து வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
குழந்தை பருவத்தில் இருக்கும் போது உடல் ஆரோக்கியம் குறித்தும் எதிர்கால வாழ்க்கை பற்றியும் எந்தவிதமாக கவலையும் இன்றி சுதந்திரமாக மன அழுத்தம் என்ற நாமமே அறியாமல் வாழ்ந்திருப்போம்.
பின்னர் இளமை பருவத்தில் பொரும்பாலானவர்கள் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் வகுத்துக்கொள்வது கிடையாது.
அதனால் முதுமை பருவத்தில் பல்வேறு இடர்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுவதுடன் விரைவாக முதுமையை அடைகின்றார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
இந்த வகையில் எவ்வாறான வாழ்க்கை முறை முதுமையை விரைவுப்படுத்துகின்றது என்பது குறித்தும் அதனை எவ்வாறு தடுக்காலாம் என்பது தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறந்த வாழ்க்கை முறை
பொதுவாகவே மனிதர்கள் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவ்வளவு முக்கியமோ, அது போல் உளரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு சமூகத்தொடர்பு இன்றியமையாதது.
மூத்த குடிமக்களில் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களில் சுமார் 23 சதவீதம் பேர் சமூக தனிமையை அனுபவிக்கின்றார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மிகுந்த மன அழுத்தத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தும்.
முதுமையடைவதை தள்ளிப்போட வேண்டும் என்றால் உங்கள் வாழ்ககை முறையில் சமூக தொடர்பு ஆரோக்கியமாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சமூக தொடர்பு குறைவது, டிமென்ஷியா, இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கும் காரணமாக அமையும்.
எனவே என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றால், நண்பர்கள், குடும்பத்தினர், கூட்டாளிகள் மற்றும் சக பணியாளர்கள் என ஏதோ ஒரு வகையில் சமூகத்துடன் சிறந்த தொடர்பை கொண்டிருக்க வேண்டும்.
தினசரி உடலுக்கு தேவையான சூரிய ஒளியை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சூரியனில் தொடர்ந்து இருப்பதன் மூலம் கண்களைச் சுற்றியுள்ள தோல் நெகிழ்ச்சித்தன்மை அற்றதாக மாறுகின்றது. அதனை தடுக்க UV பாதுகாப்பு கொண்ட நல்ல தரமான சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும்.
தினசரி அதிக நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படக்கூடும். என்றும் இளமையுடன் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றால் சிறந்த உடற்பயிற்சி அவசியம்.
உடல் செயல்பாடு குறையும் போது உடல் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் தசை திசுக்களின் இழப்பு போன்ற கோளாறுகள் ஏற்பட வழிகோளும்.
உடற்பயிற்சி, நடைபயிற்சி, நடனம் ஆகியவறில் ஏதாவது ஒன்றையேனும் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக கொண்டிருப்பது முதுமையை தாமதப்படுத்தி, உங்கள் சருமத்தை பொலிவாக வைத்திருப்பதுடன் உடலையும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது வயதான தோற்றத்தை தமாதமாக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
தியானம் மற்றும் இயற்கை எழில் நிறைந்த இடங்களுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது போன்ற விடயங்களை வாழ்க்கை முறையில் இணைத்துக்கொண்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
குறிப்பாக மது பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் அதிகளவில் துரித உணவுகளை எடுத்துக்கொள்ளும் பழக்கங்களை விட்டுவிடுவதால் நீண்ட காலம் இளமை பொலிவை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
மேலும் போதியளவான தூக்கம், குறைந்த சமூக வலைத்தளங்களின் பாவனை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் என்பன முதுமையை தள்ளிப்போடுவதில் இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |