2024-பாரிஸ் ஒலிம்பிக் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களின் பட்டியல்- யார் யார் தெரியுமா?
33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
Optical illusion:இந்த ‘960’ என்ற எண் வரிசைக்கு நடுவில் இருக்கும் ‘960’ என்ற எண்ணை கண்டுபிடிக்க முடியுமா?
இதில் இந்தியா சார்பில் 113 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அதில் தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் பாரிஸ்க்கு பதக்கத்தை நோக்கிச் செல்கின்றனர்.
தமிழ் நாட்டிலிருந்து செல்லும் வீரர்கள் தடகளம், துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாய்மர படகுப்போட்டி என 5 வகையான விளையாட்டுகளில் தெரிவாகியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டிலிருந்து துப்பாக்கிச் சுடும் பிரிவில் பிரித்விராஜ் தொண்டைமான் என்பவர் தெரிவாகியுள்ளார்.
இது போன்று தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜெஸ்வின் ஆல்ட்ரின் | தடகளம் | ஆண்கள் நீளம் தாண்டுதல் |
பிரவீல் சித்திரவேல் | தடகளம் | ஆண்கள் மும்முறை தாண்டுதல் |
ராஜேஷ் ரமேஷ் | தடகளம் | ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம் |
சந்தோஷ் தமிழரசன் | தடகளம் | ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம் |
சுபா வெங்கடேசன் | தடகளம் | பெண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம் |
வித்யா ராம்ராஜ் | தடகளம் | பெண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம் |
நேத்ரா குமணன் | படகோட்டம் | பெண்களுக்கான ஒரு நபர் படகு |
விஷ்ணு சரவணன் | படகோட்டம் | ஆண்கள் ஒரு நபர் டிங்கி |
இளவேனில் வளரிவன் | துப்பாக்கி சுடுதல் | பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள், 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி |
பிருத்விராஜ் தொண்டைமான் | துப்பாக்கி சுடுதல் | ஆண்களுக்கான பொறி |
சத்தியன் ஞானசேகரன் | டேபிள் டென்னிஸ் | இருப்பு |
ஷரத் கமல் | டேபிள் டென்னிஸ் | ஆண்கள் ஒற்றையர், அணி |
என் ஸ்ரீராம் பாலாஜி | டென்னிஸ் | ஆண்கள் இரட்டையர் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |