ஈஃபில் கோபுரத்தை பதம் பார்த்த மின்னல்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி காட்சி
பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் அடையாளமாக இருக்கும் ஈஃபில் கோபுரத்தின் உச்சியினை பிரம்மாண்ட மின்னல் ஒன்று தாக்கிய அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஈஃபில் கோபுரத்தினை தாக்கிய மின்னல்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸின் அடையாளமான உலகப் புகழ்பெற்ற கோபுரமான ஈஃபில் டவர் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
பாரிஸில் கடுமையான வெப்பஅலை நிலவிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழை, புயல் காற்றுடன் வீசியுள்ளது.

ஈஃபில் டவர் 1063 அடி உயரம் கொண்டுள்ள நிலையில், இடி மின்னல் சூழ்ந்த நிலயில், வானத்தையே பிளப்பது போன்று மின்னல் கீற்று கோபுரத்தின் உச்சியில் பாய்ந்துள்ளது.
இந்த அரிய மற்றும் மிரளவைக்கும் காட்சியை அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகளும் தங்களது கேமராக்களில் துல்லியமாகப் பதிவு செய்த காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் ஒரு லட்சம் வோல்ட் மின்சார திறன் கொண்ட மின்னல் தாக்கியும், ஈஃபில் கோபுரத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் அதன் உச்சிப் பகுதுியில் அதிநவீன மின்னல் கடத்திகள் உள்ளது.
இதன் பிரம்மாண்ட உயரம் காரணமாக வருடத்திற்கு 5 முதல் 10 முறை இவ்வாறு மின்னல் தாக்கப்படும் நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |