இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வராது
வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்
உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சனை, அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை இவை அனைத்தையும் தீர்த்து வைக்க முடியும்.
ஆனால் எப்போதுமே வீட்டில் பிரச்சனை வந்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? மன நிம்மதி இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது.
இப்படியான நிலையில், குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான வழிமுறை ஒன்று உள்ளது.
தமிழ் புத்தாண்டு பலன்கள்; குரு சனியால் ராஜயோகத்தை அடையும் தனுசு ராசி!
வேப்பிலை அகல் விளக்கு
தினமும் மாலை நேரத்தில் வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது.
அதாவது, நம் வீட்டு வாசலில் சதுர வடிவில் மஞ்சளால் கோலமிட்டு... அதன் மீது வேப்பிலையை பரப்பி, அதன் மீது 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வந்தால், திருஷ்டி படாது.
எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை பரிகாரம்
ஒரு வெள்ளை துணியில் கையளவு வெல்லம், கையளவு கோதுமை (மாவு அல்ல), கையளவு கல் உப்பு, 2 செம்பு நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து கட்டி வீட்டில் பூஜையறை அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து விடவும்.
கட்டி தொங்க விட அவசியமில்லை. மாதம் ஒரு முறை மாற்றி விடலாம். இது குடும்ப அமைதிக்கு சிறந்த முறையாகும்.
குறிப்பிட்டு கணவன் மனைவி சண்டை எனில் மேற்கூறியதில் செம்பு நாணயத்திற்கு பதில் வெள்ளி நாணயம் வைத்து விடவும். பலன் மிகும்.

தொடர்ந்து 11 வாரங்கள்
ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் மன அமைதி குறைவு, தெளிவின்மை, எப்போதும் சிந்தனைகள், பண விவகாரங்களில் தடை போன்றவை இருந்து கொண்டே இருக்கும்,
அப்படிபட்டவர்கள், ஒரு ஞாயிறு அன்று இரவு படுக்கும் முன் காய்ச்சாத பசும் பால் ஒரு ஸ்டீல் அல்லது வெள்ளி கப்பில் தன் தலைக்கு அருகில் வைத்து தூங்கி விடவும்.
பின்பு காலையில் அதை அப்படியே கொண்டு சென்று கருவேல மரத்தின் வேருக்கு விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விடவும். பாலை மூடாமல் கொண்டு செல்ல வேண்டும்.
மரம் அருகில் இல்லாதவர்கள் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் பாலை மாற்றி கொண்டு செல்லலாம். பாட்டிலை மூடக்கூடாது.
இதை வாரா வாரம் செய்து வரலாம். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய பலன் மிகும்.

ஏப்ரல் மாத ராசிப்பலன் "2022" இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!!!