இளம்பெண் ஆசைப்பட்ட படிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.... வாயடைத்துப் போன அரங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் எனது இஷ்டத்திற்கு படி என்று கூறும் பெற்றோர்கள் மற்றும் மறுக்கும் பிள்ளைகள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் எனது இஷ்டத்திற்கு படி என்று கூறும் பெற்றோர்கள் மற்றும் மறுக்கும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை தனது இஷ்டத்திற்கு படிக்கக் கூறியுள்ளனர்.
இதில் இளம்பெண் ஒருவர் தனக்கு நர்சிங் சேருவதற்கு ஆசை என்றும் ஆனால் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கு குறித்த பெண்ணின் தாய் பதிலளிக்கையில், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை... எனது ஒரு நாள் வருமானம் 400 ரூபாய் தான் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அரங்கத்தில் இருந்த சிறப்பு விருந்தினர் தான் அந்த பெண்ணிற்கு படிக்க இடம்வாங்கி கொடுப்பதாக கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |