சுவையான பப்பாளி லட்டு செய்வது எப்படி?
பப்பாளி அல்லது பப்பாசி (Carica papaya) ஒரு பழம் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் Mexico. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.
இதன் விளைச்சல் காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எளிதில் கிடைப்பது, விலை மலிவானது, எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.
ரவா லட்டு, ராகி தேங்காய் லட்டு, வேர்க்கடலை லட்டு, டேட்ஸ் லட்டு என்று எண்ணற்ற வகையான லட்டு வகைகளானது எல்லாரும் அறிந்த ஒன்றாகும்.
இதென்ன புதுசா பப்பாளி லட்டு? பப்பாளியை பழமாக சாப்பிட விருப்பப்படாதவர்கள் அல்லது sweet ஆக சாப்பிட விரும்புபவர்கள் இதை நிச்சயம் முயற்சி செய்யவேண்டிய ஒன்றாகும்.
இந்த பப்பாளியானது குறைந்த கலோரி நிறைந்தது. அதுமட்டுமின்றி நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ மற்றும் சி-களின் ஆதாரமாக விளங்குகிறது.
பப்பாளி லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
பப்பாளி பழம் - 1/2
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பாதாம் - 1/4 கப்
Desiccated coconut - 3/4 கப்
Desiccated dry nuts - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1/4 கப்
செய்முறை:
பப்பாளியை நன்கு கழுவி தோல் நீக்கி துருவி எடுத்து வைக்கவும். பால், பாதாம் மற்றும் ஏலக்காய் நன்கு மசியும் அளவிற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கியப்பின் பப்பாளி துருவலை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இத்துடன் அரைத்து வைத்துள்ள பாதாம் பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நெய்யை இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கெட்டியானப்பின் Desiccated coconut ஐ சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு நன்கு கலந்து சிறிதளவு நெய்யை சேர்த்து அத்துடன் நறுக்கிய Desiccated dry nuts ஐ சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
நன்கு கெட்டியான இந்த கலவையை லட்டு பிடித்து desiccated dry nut இல் பிரட்டி எடுத்தால் சுவையான பப்பாளி லட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |