ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் வைக்கும் பப்பாளி.. வேறு என்ன நோய்களுக்கு தீர்வாகும் தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் பப்பாளி முதல் இடத்தை பிடிக்கிறது. இந்த பழத்தில் உடலுக்கு தேவையான அவசியமான சத்துக்கள் உள்ளன.
வழக்கத்தை விட இந்த பழம் மற்ற பழங்களையும் விட குறைவான விலையில் தான் விற்பனையாகும். ஆனாலும் பப்பாளியில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளன.
அதிலும் குறிப்பாக பப்பாளி பழத்தில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆகிய சத்துக்களும் அதிகமாக உள்ளன.
அந்த வகையில், பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
1. பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையுள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். இதிலுள்ள பாப்பைன் உண்ணும் உணவில் உள்ள புரோட்டீன்களை உடைத்தெறித்து செரிமானத்தை மேம்படுத்தும். அதே சமயம், நெஞ்செரிச்சல் அறிகுறிகளை குறைக்கும்.
2. தினமும் பப்பாளி பழத்தை உட்கொண்டு வந்தால் கண் பார்வை வலுப்படுத்தப்படும். ஏனெனில் பப்பாளியில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான லைகோபைன், லுடீர் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை கண்களில் உள்ள திசுக்களில் வீக்கத்தை குறைக்கிறது. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.
3. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் பப்பாளிப்பழத்தை சாப்பிடும் பொழுது டைப்-2 சர்க்கரை குணமடைகிறது. மருந்துவில்லைகள் அடிக்கடி எடுத்து கொள்பவர்களும் பப்பாளி சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |