தாயின் அஜாக்கிரதை! கதறி துடித்த 2 வயது சிறுவன் பலியான சோகம்
தாயின் அஜாக்கிரதையின் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம், ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
இவரது மனைவி அனுசுயா (28), தங்கள் வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு ரிஷி (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி மாலை பானிபூரிக்கு குருமா தயார் செய்து அண்டா ஒன்றில் சூடாக கீழே இறக்கி வைத்துள்ளார்.
பின்னர் பிற பணிகளை செய்வதற்காக அனுசுயா சென்றுவிட்ட நிலையில், அவ்வழியே வந்த சிறுவன் தவறி குறுமா அண்டாவிற்குள் விழுந்துள்ளான்.
பின்பு சூடு தாங்கமுடியாமல் சிறுவன் ரிஷி கதறியதையடுத்து, தாய் ஓடிவந்து அவனை மீட்டு மருத்துவமனையில் மீட்டுள்ளார்.
மனைவி மீது புகார் கொடுத்த பாலாஜி! பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளருக்கு கொடுத்த பரிசு
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற ரிஷி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை ரிஷி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 2 வயது சிறுவன் தாயின் அஜாக்கிரதையால் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.