பங்குனி மாதத்தில் இந்த 3 ராசிக்கு இனி அதிர்ஷ்ட யோகம் தானாம்...!
பங்குனி மாதத்தில் நவகிரகங்களின் தலைவனாக சூரியனும், ஆசிரியராகிய குரு பகவானின் வீடான மீன ராசியில் சஞ்சரிக்க போகிறார். துலாம், விருச்சிகம், தனுசு, 3 ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கிறது.
துலாம்
துலாம் ராசியினர்கள் உல்லாச பயணம் செல்வீர்கள். செவ்வாய் நான்காம் இடத்தில் இருக்கிறார். புதியதாக வாகனம் வாங்குவீர்கள். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, வியாபார வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது.
குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, வியாபார வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது.
குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு சூரியன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். 24-ம் தேதிக்கு மேல் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். நிலம் வீடு வாங்கலாம் லாபம் கிடைக்கும்.
புதிய சொத்துக்களை வாங்கும் போது தாய் மனைவி பெயருக்கு பத்திரம் சேர்த்து எழுத வேண்டும். திருமண யோகம் பூமி யோகம் கூடி வரும். குரு நான்காம் இடத்தில் இருக்கிறார் அதிசாரமாக ஐந்தாம் வீட்டிற்கு செல்வதால் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்வது அவசியம். கேது உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதியும் சோம்பலும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் வாங்கும் யோகம் வரும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும் திருமணப்பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும்.
செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
குரு பகவான் மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும்.
ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும்.