வெறும் 10 நிமிடத்தில் சுவையான பனீர் டிக்கா! தயார் செய்வது எப்படி?
பொதுவாக பனீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பனீர் டிக்கா எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பனீர்
பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
இந்திய சீஸ் வகைகளில் ஒன்றான இந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு விருப்பமான ஒன்று. இது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடியது.
பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. எனவே நீங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது உங்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.
மேலும் இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. தற்போது பனீர் டிக்கா எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை
பனீர் - 100 கிராம்
வெங்காயம் தக்காளி - தலா ஒன்று
தயிர் - ஒரு கப்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் மிளகாய் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கவும். தயிரில் சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், எண்ணெய், எலுமிச்சைச்சாறு, கடலை மாவு, உப்பு என எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையில் பனீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
கிரில் குச்சியில் ஊறவைத்த பனீர், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக மாறி மாறி சொருகவும்.
ஒரு தவாவில் சிறிது வெண்ணெய் தடவிச் சூடாக்கவும். பின்னர் இந்த பனீர் ஸ்டிக்கை தவாவில் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.