மொறுமொறுப்பான பனீர் 65... தயார் செய்வது எப்படி?
இன்று பலருக்கும் விருப்பமான ரெசிபி என்றால் அது பனீர். ஆம் சிறு குழந்தைகள் ஆரம்பித்து பெரியவர்கள் வரை அனைவரும் பனீர் பிரியராகவே மாறியுள்ளனர்.
அதிலும் மொறுமொறுப்பான பனீர் 65 என்றால் அனைவருக்கும் நாக்கில் எச்சில் தான் சொட்டும். அவ்வாறான பனீர் 65 எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
- பன்னீர் - 200 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
- தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
மாவிற்கு...
- மைதா - 3 டேபிள் ஸ்பூன்
- சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- சமையல் சோடா - 1 சிட்டிகை
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக, அதாவது இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள சில பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் ஒவ்வொன்றாக பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.
குறிப்பு
பன்னீர் துண்டுகளானது மசாலாவில் நன்கு ஊறி இருக்க வேண்டும்.