அருமையான பனீர் பொடிமாஸ் செய்து பாருங்க...
பனீர் மிகவும் சத்தான ஒரு உணவுப்பொருள். இதில் புரதம், கார்போஹைட்ரேட், கல்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பனீரைக் கொண்டு பலவிதமான உணவுப் பொருட்களை செய்யலாம். இப்போதும் சற்று வித்தியாசமான பனீர் பொடிமாஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பனீர் - 200 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 2 பல்
கடுகு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பனீரை துருவிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
இஞ்சியை தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும்.
அதனுடன் கீறிய பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய வெங்காயம் என்பவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் இஞ்சி துருவல், நசுக்கிய வெள்ளை பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்த வதக்க வேண்டும்.
அதற்கடுத்ததாக மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
இறுதியாக பனீருடன் மிளகுத்தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
அருமையான பனீர் பொடிமாஸ் ரெடி.