பார்த்தும் நாவூற வைக்கும் பனீர் மோமோஸ்: வீட்டிலேயே செய்து அசத்தலாம்
பொதுவாகவே இப்போதுள்ளவர்கள் சாதம், குழம்புகளை வெறுத்து விட்டு பீட்சா, பேர்கர் போன்ற மேலைத்தேய உணவுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அப்படி சிறியவரிலிருந்து பெரியவர் வரைக்கும் விரும்பி உண்ணும் ஒரு சிற்றுண்டி வகைதான் இந்த மோமோஸ். இதில் பல வகைகள் இருக்கிறது சிக்கன் மோமோஸ், சில்லி மோமோஸ்,தந்தூரி மோமோஸ், வெஜ் மோமோஸ் என்று பல விதமாக இருக்கிறது.
அந்தவகையில் இன்று நாம் பன்னீர் மோமோஸ் எப்படி செய்வது பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- மைதா மா - 1 1/2 கப்
- பூண்டு - 1 கரண்டி (நறுக்கியது)
- இஞ்சி - 1 கரண்டி (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2 கரண்டி (நறுக்கியது)
- குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)
- கேரட் - 1/4 கப் (துருவியது)
- முட்டைக்கோஸ் - 1/4 கப் (துருவியது)
- வெங்காயம் - சிறிது ( நறுக்கியது)
- வெங்காயத்தாள் - சிறிது ( நறுக்கியது)
- பன்னீர் - 1 கப் (துருவியது)
- உப்பு - 1/2 கரண்டி
- எண்ணெய் - அரை கப்
- மிளகு தூள் - 1 கரண்டி
- சில்லி சாஸ் - 2 கரண்டி
செய்முறை
முதலில் மைதா மாவில் அளவான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி பிசைந்து 30 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும்
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாகியதும் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அதில் அளவாக எடுத்துக் கொண்ட கேரட், முட்டைக்கோஸ் என்பவற்றையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயத்தாள் மற்றும் வெங்காயம் சேர்த்து பன்னீரை சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகு, சில்லி சாஸ், சோயா சாஸ், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
இப்போது தயார் செய்து வைத்த மாவை சப்பாத்திக்கு எடுப்பது போல அளவான மா எடுத்து மெல்லியதாக தேய்த்து நடுவில் தயாரித்து வைத்த பன்னீர் கலவையை நடுவில் வைக்கவும்.
பின்னர் மாவை குழி போல மடித்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான மோமோஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |