பனீர் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே
சைவ உணவு உண்பவர்கள் மட்டுமின்றி அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கின்றது பன்னீர்.
இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உ்ண்ணும் பன்னீரினை அதிகளவு சாப்பிடுவதால் அது தீமையை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
பன்னீர் சாப்பிடுவதால் தீமைகள் என்ன?
உணவுப்பிரியர்களின் பட்டியளில் முதல் இடத்தில் இருக்கும் பன்னீர் அதிகம் எடுத்துக் கொள்வதை சற்று தவிர்க்க வேண்டும்.
உயர்ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் பன்னீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வயிற்று பிரச்சினை உள்ளவர்கள், செரிமானக் கோளாறு காண்டவர்கள் பன்னீர் எடுத்துக் காள்ள வேண்டாம்.
அடிக்கடி ஃபுட் பாய்சன் பாதிப்பினால் அவதிப்படுபவர்கள், பன்னீரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தேவைக்கு அதிகமான புரதச் சத்துக்கள் இதில் உள்ளதால், நோயின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.
பன்னீரை அதிகமாக எடுத்துக் கொண்டால், தலைவலி, குமட்டல், பசியின்மை ஏற்படுத்தும். ஆதலால் குறைந்த அளவு சாப்பிடலாம்.
மேலும் அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் ஒற்றைத் தலைவலி பிரச்சினை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே வேளை கர்ப்பிணி பெண்கள் பன்னீர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வாயு பிரச்சினையை ஏற்படுத்துவதால் மருத்துவரின் அறிவுரை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.