சுகர் நோயாளியும் விரும்பி விரும்பி ருசிக்கும் பன்னீர் கட்லெட்!
மாலை நேர ஸ்நாக்ஸாக பன்னீர் கட்லெட் செய்து சாப்பிடலாம்.
இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம்.
புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.
தேவையான பொருட்கள்
- பன்னீா் - 500 கிராம்
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- வெங்காயம் - 4
- பச்சை மிளகாய் - 7
- கறிவேப்பிலை - 2 கொத்து
- பூண்டு, பூண்டு விழுது - 1 ½மேஜைக்கரண்டி
- சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு - 3 பொரிக்க
தேவையான பொருட்கள்
- சோள மாவு - 4 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பிரெட் தூள் - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். பன்னீரை துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் சோம்பு, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.
பின்பு பன்னீர் கலவையை மசித்த உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும்.
பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும். கட்லெட்டுகளை சோளமாவுக் கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான பன்னீர் கட்லெட் தயார்.