சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பன்னீர் பட்டர் மசாலா- செய்வது எப்படி?
பலரும் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறி உள்ளது பனீர் பட்டர் மசலா. இவற்றில் அசைவத்தை காட்டிலும் புரதசத்து அதிகம்.
மேலும்,, சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என செய்து போரடித்தவர்கள் நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய டிஷ் இது.
சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பனீர் பட்டர் மசாலா எப்படி தாயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 75 மில்லி
- வெங்காயம் – 3
- இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 ஸ்பூன்
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
- மல்லி தூள் – 3 டீ ஸ்பூன்
- காஸ்மீரி மிளகாய் தூள் – 2 1/2 டீ ஸ்பூன்
- சுடு தண்ணீர் முந்திரி பருப்பு – 1கப் (அரை மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்)
- உப்பு – தேவையான அளவு
- கரம் மசாலா – 1 1/4 டீ ஸ்பூன்
- சர்க்கரை – 2 டீ ஸ்பூன்
- பட்டர் – 2 டீ ஸ்பூன்
- பிரஷ் கிரீம் – 4 டீ ஸ்பூன்
- மலாய் பன்னீர்
- கொத்தமல்லி
செய்முறை
முதலில், ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை போகும் வரை வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அவை ஓரளவு நன்கு வதங்கிய பிறகு, அவற்றோடு மஞ்சள் தூள், மல்லி தூள், காஸ்மீரி மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அவற்றோடு 1 டம்ளர் சுடு தண்ணீர் சேர்த்து 1 நிமிடங்களுக்கு கிளறிய பிறகு, 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த கலவை நன்கு கொதித்து வந்த பிறகு ஊற வைத்து அரைத்து வைத்துள்ள முந்திரி பருப்பு கலவை சேர்த்து மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பிறகு அதில் சர்க்கரை, பட்டர் மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து கொதிக்க விடவும்.
இந்த கலவை நன்கு கொதித்து வந்த பிறகு அதில் மலாய் பன்னீர் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து தனலை அணைக்கவும். சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி....!