சுக்குநூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! வீட்டுக்கு தெரியாமல் கண்ணன் செய்த தந்திரம்
ஜீவாவை அசிங்கப்படுத்திய கண்ணன், சம்பளப் பணத்தில் பாதியை எடுத்து வைத்ததை ஐஸ்வர்யா அனைவரிடமும் உளறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக நகரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தன்னுடைய கதாபாத்திரத்தில் இறங்கி நடிப்பதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில் கதிர் - முல்லை ரொமன்ஸ்க்காக மாத்திரமே இந்த சீரியலை பார்த்து வந்த ரசிகர்கள் சித்ராவின் மரணத்திற்கு பின்னர் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து நடித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருக்கும் ஐசு, முல்லை, தனம் என மூன்று நாயகிகளும் கர்ப்பமாக இருக்கிறார்கள்.
இவர்களை மீனா தான் பக்கத்திலிருந்து கவனித்துக் கொள்கிறார். அப்போது சம்பளத்தை அனைவரும் மூத்த அண்ணனிடம் கொடுக்கும் போது ஜீவா மட்டும் கொடுக்க ஒன்றும் இல்லாமல் தனிக்குனிந்த படி நிற்கிறார்.
மீனாவிடம் உளறிய ஐசு
இவரை பார்க்கும் போது தனம் மற்றும் முல்லைக்கு சற்று வருத்தமாக பார்க்கிறார்கள். மீனாவிற்கு அசிங்கமாக போகிறது. இந்த நிலையில் கதிரின் பணத்தில் வாங்கிய காரை ஜீவா விபத்தாக்கி விடுகிறார்.
இதனால் வீட்டிலுள்ள அனைவரும் கடுப்பில் கத்தியுள்ளார்கள், இதனாலும் மீனா மனமுடைந்தப்படி நிற்கிறார். இதனை தொடர்ந்து கண்ணன் முதல் மாதம் சம்பளம் வாங்கியதற்காக முல்லை ஐசுவிடம் ஏதாவது வாங்கி கேக்கிறார்.
அப்போது நாங்கள் வீட்டு தேவைக்காக 17 ஆயிரம் தான் கொடுத்தோம். ஆனால் கண்ணனுக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனக் கூறி ஐசு மீனா மற்றும் முல்லை கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் கலவரம் ஒன்று வெடிக்கும் எனரசிகர்களால் நம்பப்படுகிறது.