மீண்டும் குமாருவுடன் சேட்டை செய்யும் அரசி.. அந்த பொண்ணு யாரு? ஒரு கேள்விக்கே திணறும் காட்சி
அரசி- குமாரு இருவரையும் குடும்பத்தினர் பிரித்து வைத்திருக்கும் வேளையில், இருவரும் சேர்ந்து செய்த ரீல்ஸ் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த சீரியலில், முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டாம் அதே நடிகர்களுடன் சிலருடன் மாமியார்- மருமகள்கள் பந்தம் என்ற தொனிப் பொருளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பாண்டியனின் கடைசி பெண்ணான அரசியை ஏமாற்றி கோமதி வீட்டிலுள்ள குமரவேல் காதலிப்பது போன்று நடிக்கிறார். அந்த பெண்ணுக்கு விடயம் தெரியாமல் காதலிக்கிறார்.
கடைசியாக அரசியின் திருமணத்தை நிறுத்தி, பாண்டியனின் மானத்தை வாங்கி விட்டார். அதற்கெல்லாம் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில், அரசி தாலியுடன் வந்து குமாரவேலை நடுங்க நடுங்க வைத்தார்.
அந்த பொண்ணு யாரு?
இந்த நிலையில், பாண்டியனுக்கு அனைத்து உண்மைகளும் தெரியவந்த காரணத்தினால் தன்னுடைய பெண்ணை அழைத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறார். காதலுக்கு துணையாக நின்ற சுகன்யாவுக்கும் கோமதி தர்ம அடிக் கொடுத்து கண்டித்துள்ளார்.

Viral Video: படமெடுத்து நின்ற பாம்பிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... பின்பு நடந்த டுவிஸ்ட்
இப்படியாக சீரியலில் குமார்- அரசி இருவரும் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் இரண்டு வீட்டு சண்டையும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இப்படி இருக்கும் பட்சத்தில் அரசியுடன் இணைந்து குமார் ஆசை மச்சான் பாடலுக்கு செய்த ரீல்ஸ் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “இருவரும் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |