ஜீவாவை அவமானப்படுத்தும் மாமனார்.. கோபத்தில் மீண்டும் பொங்கிய மீனா! இனி நடக்க போவது என்ன?
மீண்டும் ஜீவாவை அவருடைய மாமனார் பணம் எடுத்து செலவு செய்து விட்டார் என அசிங்கமாக பேசியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பாத்தார் என நான்கு சகோதரர்களும் அவர்களின் வாழ்க்கை எப்படி செய்கின்றது என்பதனையும் இந்த சீரியல் எடுத்து கூறுகின்றது.
தற்போது சகோதரர்கள் நான்கு பேரும் நான்கு திசையில் இருக்கிறார்கள். ஆனாலும் முல்லையும் தனமும் இணைந்து கண்ணனை வீட்டில் இருக்க வைத்துள்ளார்.
கொதித்தெழுந்த மாமனார்
இந்த நிலையில் தற்போது முல்லை பிரசவம் முடிந்தும் மருத்துவமனையில் தான் இருந்து வருகிறார். அதற்காக ஜீவா மாமனாரின் பணத்தை எடுத்து விட்டார்.
இதனை தெரிந்து கொண்ட மாமனார், “ எவ அப்பாவுட்டு சொத்தை யாருக்காக செலவு செய்வது..” என அசிங்கப்படுத்தியுள்ளார்.
இவற்றையெல்லாம் மறைந்திருந்து கேட்ட மீனா..“ நீங்க ஒன்னும் காசு சும்மா தரலை..ஜீவா செய்கின்ற வேலைக்கு தான் அவ பணம் எடுக்கின்றான்" என அம்மாவையும் அப்பாவையும் கிழித்து தொங்க விட்டுள்ளார்.
இவற்றையும் தாண்டி ஜீவாவை கூலியில்லாத வேலைக்காரனாக தான் அவருடை மாமனார் வைத்துள்ளார்.