விக்ரமனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனுப்பிய வீடியோ.. நிறைவு நேரத்தில் இது தேவையா?
விக்ரமனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக கடந்த 5 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
தமிழில் உருவாகி ரசிகர்களை கவர்ந்த இந்தத் தொடர், தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.
பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிய சீரியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த சித்ரா இன்று நிறைவில் இல்லாத கொஞ்சம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றுடன் இந்த தொடர் நிறைவடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் அக்டோபரில் துவங்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது அக்டோபரிலேயே நிறைவடைந்துள்ளது.
நிறைவு
இன்றைய தினம் இறுதி எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவதாக காட்சிகள் காணப்பட்டன.
பின்னர் இந்த சீரியல் நிறைவில் இல்லாமல் விக்ரமன் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்.
அவருக்கு வீடியோ அனுப்புவது போல் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அனைவரும் மக்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறார்.
இந்த சீரியலில் இரண்டாம் பாகம் மக்களின் வரவேற்புடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து எப்படி இருக்க போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.