நிலை குலைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறும் ப்ரோமோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கூட விறு விறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
கடந்த வாரம் தான் கதிர் - முல்லை ஜோடி மீண்டும் வீட்டிற்கு வந்தது.
நிலை குலைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
வந்ததை கொண்டாடி முடிப்பதற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே நடுத்தெருவுக்கு சென்று விட்டது.
ஜீவாவின் மாமனார் வீட்டிற்கு வந்து குடும்பத்தையே ரண களப்படுத்தியுள்ளார். ஒரு நிமிடம் நிலை குலைந்து மயக்க நிலைக்கு தனம் சென்று விட்டார்.
குடும்பமே நாடகக்கார குடும்பம் என்று மாமனார் திட்டியதால் அனைவரும் அங்கிருந்து வெளியேறி கதிர்-முல்லை வசித்து வந்த வாடகை வீட்டிற்கு ஒன்றாக குடிபெயருகின்றனர்.
இதனால் நாளை முதல் இன்னும் சில அதிரடி திருப்பங்கள் எதிர்வரும் காலங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.