பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பாத்தாரை தாக்கும் மற்றுமொரு ஆபத்து.. உண்மையை கேட்டு அதிர்ச்சியடைந்த மீனா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தாரை மீண்டும் ஆபத்து தாக்க போவதாக இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் தற்போது முல்லையிற்கு பெரிய விபத்து ஒன்று இடம்பெற்று குழந்தையா? முல்லையா? என போராடி வந்தார்கள். ஆனாலும் தற்போது இரண்டு பேரும் நன்றாக இருக்கிறார்கள்.
மற்றுமொரு சம்பவம்
இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி தனத்திற்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறக்க போகின்றது.
இதனால் அங்கிருப்பவர்கள் தனத்தை மிகவும் கவனமாக பார்த்து கொள்கிறார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில் தனத்திற்கு மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை தெரிந்து கொண்ட மீனா அக்காவிற்கு ஏதாவது நடந்து விடும் என்ற பயத்தில் அதிர்ச்சியடைந்துள்ளார்.