Pandian Stores 2: அம்பலமாகிய போலி நகை விவகாரம்... மீண்டும் குற்றவாளியாகிய பாண்டியன் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயில் கொண்டு வந்த போலி நகை விவகாரம் தற்போது காவல்நிலையம் வரை சென்றுள்ளதால், அதிலும் பழி போட்டு பாண்டியன் குடும்பத்தை கதற வைத்துள்ளார் மயிலுவின் அம்மா.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்துள்ளது.
தங்கையையும், அவரது குடும்பத்தையும் எதிரியாக நினைத்து பல இடையூறுகளை செய்த அண்ணன்கள் தங்கைக்காக காவல்நிலையம் வந்து சாட்சி கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

மயிலுவை வரதட்னை கொடுமை செய்துள்ளதாக அவரது அம்மா புகார் அளித்ததால் குடும்பத்தையே காவல்நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது நகை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இதில் மயிலு கொண்டு வந்த 80 பவுன் நகை இப்படி கவரிங்காக மாற்றி வைத்துள்ளனர் என்று மயிலு அம்மா குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு மீனா அவர்கள் போட்டதில் 8 பவுன் மட்டும் தான் தங்கம் மீதம் கவரிங் தான் போட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு மயிலுவை காவல்நிலையத்திற்கு போலிசார் வரக்கூறியுள்ளனர். உண்மையை கூறி பாண்டியன் குடும்பத்தை மயிலு வெளிக்கொண்டுவாளா? என்ற கேள்வி எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |