பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றமா? புது நடிகை இவரா?
தமிழ் சீரியலில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நடித்த சித்ரா தற்கொலைக்கு பின், காவியா அறிவுமணி தான் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முல்லை பதில் யார்?
நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பிரபல நடிகை! அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறிய புகைப்படம்
இந்த நிலையில், இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, அவருக்கு பதில் யார் அழைக்கபோகிறார்கள் என்ற குழம்பிய நிலையில், ஆல்யா மானசா நடிக்க இருக்கிறார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.