Pandian Stores 2: மீனா வீட்டில் தஞ்சமடைந்த மயில்... செந்தில் கோபத்தில் எடுக்கும் முடிவு என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயில் உயிரை மாய்த்துக் கொள்ள சென்ற போது மீனா அவரை தடுத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. சமீபத்தில் கோமதி தனது அண்ணன்களுடன் சேர்ந்த நிலையில், ராஜீ திருமண உண்மை மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மயில் பொய்சொல்லி சரவணனை திருமணம் செய்தது மட்டுமின்றி, குடும்பத்தையே நீதிமன்றத்தின் படியேற வைத்துள்ளார்.

மேலும் மயிலின் வீட்டிலும் அவரது அம்மா அவரை சத்தம் போட்டு வந்த நிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய மயில் சரவணனை பார்க்க வந்தார். அவரும் அவரை சத்தம் போட்ட நிலையில், கடைசியாக உயிரை மாய்த்து்க் கொள்ள சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மீனா அவரைப் பார்த்து மீட்டு, தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மயிலை தனது வீட்டில் பார்த்த செந்தில் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |