மூர்த்தியின் வீட்டு வாசலில் கண்ணன் ஐஸ்வர்யா! பாண்டியன் ஸ்டோர்ஸில் பரபரப்பான திருப்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா மீண்டும் மூர்த்தியின் வீட்டிற்கு வந்த நிலையில், மூர்த்தியின் ரியாக்ஷன் என்ன என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மூர்த்தி கதிர் இருவரும் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
வெளியே சென்ற ஐஸ்வர்யா கண்ணன் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு கடன் அதிகமாக வாங்கி பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிலையில் அவர்களை காப்பாற்ற சென்ற கதில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்பு ஒருவழியாக மூர்த்தி, ஜீவா இருவரும் கதிரை அழைத்து வந்த நிலையில், கதிர் கண்ணன் ஐஸ்வர்யா இருவரையும் மூர்த்தியின் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மூர்த்தி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழும்பியுள்ளது.