அவசர அவசரமாக மருத்துவரை பார்க்க சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! மருத்துவமனை வாசலிலிருந்து வெளியிட்ட வீடியோ..
அறுவை சிகிச்சை பின்னர் கிளினிக் முறையாக போகவிட்டால் ஏற்படும் பிரச்சினை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
சுமார் 5 வருடக்காலமாக பிரபல தொலைகாட்சியில் மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் சீரியல்களில், தற்போது டிஆர்பி ரேங்கில் முதல் இடத்தில் ஓடும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் யூடியூப் சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் கலந்துக் கொண்டு பிரபலமடைந்து வருகிறார்கள்.
இதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில் மக்களுக்கு தேவையான டயட் ,சில மருத்துவ குறிப்புகள் மற்றும் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
மீண்டும் சிகிச்சைக்கு சென்ற பிரபலம்
இந்நிலையில் “சமீபத்தில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு மார்பு பகுதியில் கட்டியொன்று இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து எடுத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் 3 மாதங்களுக்கு ஒருமுறை வைத்தியரை பார்க்க வேண்டியிருந்தது, ஆனால் நான் பார்க்கவில்லை.
இதனை தவிர்த்த காரணத்தால் எனக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் சற்று பயம் ஏற்பட்டு வைத்தியரிடம் சென்று, ஸ்கேன் செய்து பார்த்தில் ஒன்றும் இல்லை சாதாரண வலி என தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுருந்தார்.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “ஹேமாவின் உடல்நிலை குறித்து வருத்தம்” தெரிவித்துள்ளார்கள்.