Pandian Stores 2: தந்தையைக் காப்பாற்ற காவல்நிலையம் வந்த அண்ணன்கள்! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை பிரிந்திருந்த அண்ணன் தங்கைகள் காவல்நிலையத்தில் ஒன்று சேர்ந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்துள்ளது.
தங்கையையும், அவரது குடும்பத்தையும் எதிரியாக நினைத்து பல இடையூறுகளை செய்த அண்ணன் தங்கைக்காக காவல்நிலைய படி ஏறியுள்ளனர்.

மயிலு வீட்டில் கொடுத்துள்ள வரதட்சணை புகாரால் குடும்பத்துடன் காவல்நிலையத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் மகளுக்காகவும், தங்கைக்காகவும் அண்ணன்கள் வந்து நிற்கின்றனர்.
இதுவரை பலரும் எதிர்பார்த்த இந்த கதைகளம் தற்போது நடந்துள்ளது இன்னும் விறுவிறுப்பினை அதிகரித்துள்ளது. காவல்நிலையத்திற்கு வந்த அண்ணன்கள் தங்கையின் குடும்பம் எதுவும் செய்திருக்க மாட்டார்கள் போலிஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
ஆனால் கொடுத்திருக்கும் வழக்கு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் வழக்கு என்று அதிகாரி கூறியுள்ளனர். தங்கை மற்றும் மகளை காப்பாற்ற என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |