டேய் கண்ணா.. ஒரு நாள் செம்மையா வாங்க போற! பரபரப்பான தருணங்கள்
கள்ளா பெட்டி சாவியை தட்டி பறிக்க எண்ணும் கண்ணனுக்கு சரியான பதிலடியை முல்லை கொடுத்து தொடரை பரபரப்பாக்கியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் துவங்கிய காலத்திலிருந்து மக்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று வருகிறது.
அண்ணன், தம்பிகளின் குடும்ப அழகாக கூறும் கதையாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. ஒரு கூட்டு குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக கூறும் கதையம்சங்களை கொண்டு நகர்ந்தப்படுகிறது.
தற்போது வீட்டிலிருக்கும் மீனாவை தவிர்த்து தனம், முல்லை, ஐசு என மூவரும் கர்ப்பமாகியுள்ளார். இதனால் மீனா தான் வீட்டிலுள்ள அனைவரையும் பார்த்துக் கொள்கிறார்.
இவ்வாறு மீனா கஷ்டப்படுவது ஜீவாவிற்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. இதனால் மீனாவிற்கு அடிக்கடி உதவி செய்து கொடுத்து வருகிறார். மீனாவின் தங்கை திருமண வேலைகளை ஜீவா பார்ப்பதால் பணம் இல்லாமல் இவர் தனியாக இருப்பது விளங்க ஆரம்பித்துள்ளது.
கள்ளாச்சாவியை எடுக்க திட்டம் போடும் கண்ணன்
இதனை கவனித்த மீனாவின் அப்பா ஒரு தொகை பணத்தை கொடுத்து செலவு செய்யுமாறு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த எபிசோட்களில் ஜீவா கடையை பாதியாக மூடி விட்டு மீனாவை கூப்பிட சென்றதால் மூர்த்தி கடுப்பாகியுள்ளார்.
இதனால் மூர்த்தி கடை கள்ளப் பெட்டி சாவியை ஜீவாவிடம் கொடுத்து உனக்கு வேண்டிய மாதிரி செலவு பண்ணு என கூறியுள்ளார்.
இதனை கவனித்த கண்ணன் எனக்கும் காசு இல்லை என்றால் கள்ளப்பெட்டி சாவியை தருவீங்களா? என கேட்டுள்ளார். இதற்கு ஐசுவும் ஆதரவு காட்டியுள்ளார்.
கண்ணனின் திட்டத்தை புரிந்துக் கொண்ட முல்லை, தற்போது உங்களுக்கு நக்கல் விளையாட்டு தேவையா? என கேட்டு வாயை அடைத்துள்ளார்.
இந்த பரபரப்பான காட்சி ப்ரோமோ வெளிவந்துள்ளது.