குடும்பத்தை சேர்க்க போடும் பிளான்! கண்ணனை பிரிக்க வில்லியாக மாறி ஐஸ்வர்யா செய்த சூழ்ச்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தை சேர்க்க கதில் போடும் திட்டத்தை தவிடுபொடியாக்க ஐஸ்வர்யா வேறொரு திட்டத்தை போட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தில் ஒன்றாக இருந்த அண்ணன் தம்பதிகள் தற்போது பிரிந்து சென்றுள்ளனர்.
ஐஸ்வர்யா சண்டை போட்டது முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சீரியலில் மீனா தான் வில்லி என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யாவை வில்லியாக காட்டி வருகின்றனர்.
தற்போது முல்லைக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில், குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் தனம் மற்றும் கதிர் காணப்படுகின்றனர்.
பின்பு நிகழ்ச்சிக்கு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே மாதிரியான சட்டை எடுத்துக் கொடுத்து ஜீவாவையும், கண்ணனையும் அழைத்துள்ளார்.
இதில் ஜீவா வருவதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், மற்றொரு புறம் கண்ணனுக்கு எடுத்துக்கொடுத்த சட்டையை தான் போட விட மாட்டேன் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
அதே போன்று தான் அந்த சட்டையை எங்கு வைத்திருக்கிறேன் என்ற ஞாபகம் இல்லை என்றும் நாம் எடுத்த சட்டையைப் போட கண்ணனை வற்புறுத்தவும் செய்கின்றார்.
வளைகாப்பு நிகழ்வுக்கு எல்லா ஏற்பாடுகளையும் கதிர் தனியாக செய்து வருவதுடன், பழைய நினைவுகளை நினைத்து சோகமடையவும் செய்கின்றார்.
கண்ணனும் தனது அண்ணனுடன் இருந்த நினைவுகளை நினைத்து சற்று சோகத்தில் காணப்படுகின்றார். கடுப்பான ஐஸ்வர்யா வேற டாப்பிக் பேசி அவரை திசை திருப்பியுள்ளார்.