பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: லீக்கான தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா வரவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
அதன்படி சீசன் 7ல் ரேகா நாயர், மாகாபா ஆனந்த், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், காக்கா முட்டை விக்னேஷ், நடிகர் பப்லு பிரித்விராஜ், நடிகை சோனியா அகர்வால், தொகுப்பாளர்கள் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின், விஜே பார்வதி என்று கூறப்படுகின்றது.
தற்போது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா வரவிருப்பதாக தகவல் வளெியாகியுள்ளது.
ஏற்கனவே குறித்த சீரியல் நிறைவு பகுதியை எட்டிவரும் நிலையில், ரசிகர்கள் கூறுவது போன்று உள்ளே வருவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது என்றே தெரிகின்றது.
மேலும் பிரபல ரிவி அடுத்தடுத்து பல ப்ரொமோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், குறித்த தகவலும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |