பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொள்ளும் 18 போட்டியாளர்கள்: அதிரடியாக களமிறங்கும் தொலைக்காட்சி பிரபலங்கள்
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படும் 18 பேரின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி முதன்முதலாக அமெரிக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இது அப்படியே இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும்.
அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள். அதுபோல தமிழில் 6 சீசன்கள் முடிந்து விட்டது. இறுதியாக இடம்பெற்ற ஆறாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்றார்.
பிக்பாஸ் 7இல் களமிறங்கும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமடையவேண்டும் என்று எண்ணத்தில் பலர் கலந்துக் கொண்டு மக்களின் மனதில் நின்றவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி பிரபலம் ஆகவேண்டும் என்று பல சின்னத்திரை மற்றும் திரைப் பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல சம்மதம் சொல்லி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானவர்களின் பட்டியலை முன்னணி ஊடகம் ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் 7க்கு செல்லும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று சிலரின் பெயர்கள் வெளியாகியுள்ளது. கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன் ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர் மாடல், ரவி குமார், மாடல் நிலா, நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப் செய்தி வாசிப்பாளர், ரஞ்சித் பப்லு, அகில் சோனியா அகர்வால், வி.ஜே. பார்வதி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |