கர்ப்பம் இல்லையா? பரிதவிப்பில் தங்கமயில்.. மனைவியை தள்ளி வைக்கும் சரவணன்
தங்கமயில் கர்ப்பமாக இல்லை என்பதை மருத்துவர் பரிசோதனையில் கண்டுபிடித்து கூறி விடுகிறார். இதனால் வீட்டில் அடுத்த பூகம்பம் வெடிக்கவுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல், தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், சீரியலில் கடந்த வாரங்களில் பல டுவிஸ்ட்கள் வெளிச்சத்திற்கு வந்து குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் வெடித்தன.
அரசி திருமணம் முதல் தங்கமயில் கர்ப்பம் வரை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத இடியாகவே உள்ளது.
திருமணம்
இந்த நிலையில், பாண்டியன் சரவணனுக்கு பெண் கேட்டு போகும் பொழுது தன்னை விட பெரிய பெண்ணான தங்கமயிலை அவருடைய அப்பா அம்மா இருவரும் பொய் கூறி திருமணம் செய்து வைக்கிறார்கள். அதே போன்று அவர் பள்ளிப்படிப்பை கூட சரியாக முடிக்காதவர், ஆனால் அவர் ஒரு பட்டதாரி என்றும் கூறுகிறார்கள்.
இந்த விடயம் சரவணனுக்கு தெரிந்த போது அவரை கடும் கோபத்துடன் அவரின் அம்மா வீட்டில் விட்டு விட்டு வருகிறார்.
அப்போது தங்க மயில் வாந்தி எடுக்கிறார், பரிசோதித்து பார்க்கும் பொழுது தங்கமயில் கர்ப்பம் என கூறி மருத்துவ சிகிச்சைகளில் தெரியவருகிறது.
மனைவியை தள்ளி வைத்த சரவணன்
அதன் பின்னர், தன்னுடைய குழந்தை மயில் வயிற்றில் இருப்பதால் பழைய கோபத்தை மறந்து சரவணன், தங்க மயிலை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தங்கமயில் கர்ப்பமாக இல்லை என தற்போது மருத்துவ பரிசோதனையில் தெரியவருகிறது.
இதனால் மனம் உடைந்து போன தங்கமயில் சரவணனை கட்டிபிடித்து அழுகிறார். ஆனால் தங்கமயில் தன்னை மீண்டும் ஏமாற்றி விட்டதாக நினைத்து சரவணன் தங்க மயிலை தள்ளி விட்டுச் செல்கிறார்.
இனி வரும் எபிசோட்களில் தங்கமயில் செய்த பழைய தவறுகள் அனைத்தும் பாண்டியனுக்கும் குடும்பத்தினருக்கும் தெரியவரும் என சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |