விடாமல் துரத்தும் மயிலு.. விபரீத முடிவு எடுத்த சரவணன்- இனி செய்யப்போகிறார்கள்?
தங்கமயில் செய்த பித்தாலாட்டங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, பாண்டியன் பொறுமையாக அவருடைய அப்பா- அம்மாவை அழைத்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல், தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், சீரியலில் கடந்த வாரங்களில் பல டுவிஸ்ட்கள் வெளிச்சத்திற்கு வந்து குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் வெடித்தன. அரசி திருமணம் முதல் தங்கமயில் கர்ப்பம் வரை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத இடியாகவே உள்ளது.

விபரீத முடிவு எடுத்த சரவணன்
இந்த நிலையில், பாண்டியன் சரவணனுக்கு பெண் கேட்டு போகும் பொழுது தன்னை விட பெரிய பெண்ணான தங்கமயிலை அவருடைய அப்பா அம்மா இருவரும் பொய் கூறி சரவணனுக்கு செய்து வைத்த திருமணம் தற்போது வீட்டில் பெரிய பூகம்பமாக வெடித்து கொண்டிருக்கிறது.
இந்த விடயங்கள் சரவணனுக்கு தெரியவந்த பின்னர், சரவணன் இதுவரையில் கண்டுபிடித்த தங்கமயிலின் பித்தாலாட்டங்கள் அனைத்தையும் வீட்டிலுள்ளவர்கள் கூறி மன்னிப்பு கேட்கிறார்.

இதனால் மனம் உடைந்து போன பாண்டியன்- கோமதி இருவரும் சேர்ந்து தங்கமயிலை அவருடைய அப்பா- அம்மா வீட்டிற்கே அனுப்பி விடுகிறார். ஆனாலும் அடங்காத தங்கமயில் எப்படியாவது வீட்டுக்குள் வந்து விட வேண்டும் என்ற ஆசையில் மறுநாள் காலையில் வீட்டு முன் வந்து அமர்ந்திருக்கிறார்.
மீனாவும் ராஜும் எவ்வளவு கூறியும் கேட்காமல் சத்தம் போட கோமதிக்கு கேட்டு விடுகிறது. இதனால் வெளியில் தள்ளி கதவை அடைக்கிறார். அதன் பின்னர் கோமதி, தங்கமயிலின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க, அவர்களும் வந்து வீட்டு முன் நின்று அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் சரவணன் எனக்கு விவாகரத்து வேண்டும். இவளுடன் இனி வாழ முடியாது என அவருடைய முடிவை கூறுகிறார்.
இது நடக்காவிட்டால் தங்கமயில் மற்றும் அவருடைய குடும்பத்தினரை பெயரை எழுதி வைத்து விட்டு இறந்து விடுவேன் என்றும் கூறுகிறார். மகனின் முடிவை கண்டு பயந்து போன பாண்டியன் இனி என்ன செய்யப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |