பாண்டியனுக்காக தாலியை தூக்கி வீசிய அரசி.. உடைந்து போன குமரவேல்- கெஞ்சி அழுத ஆத்தா
தன்னுடைய அம்மாவின் அம்மா கெஞ்சும் கேட்காத அரசி, பாண்டியனுக்காக கழுத்தில் போட்டிருந்த தாலியை கழட்டி வீசியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்- 2
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, தற்போது இரண்டாம் பாகத்தையும் வெற்றிகரமாக கொண்டு செல்கிறது.
அந்த வகையில், குமரவேல் வலையில் விழுந்த அரசி, பாண்டியனுக்காக வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.
இதனை எப்படியாவது தடுக்க நினைத்த குமரவேல் அரசியை கடத்தி வைத்து நாடகம் போட்டார். குமரவேலுக்கு பாடம் காட்ட நினைத்த அரசியை அவரே ஒரு தாலியை கட்டிக் கொண்டு, குமரவேல் மனைவியாக சென்றார்.
ஆனால் நாளுக்கு நாள் அரசியை பகடைகாயாக பயன்படுத்தி குமரவேல் ஆடும் ஆட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியை உண்மையை சண்டையில் கூறி விடுகிறார். அதற்கு மீனாவும் ராஜீவும் ஆதரவாக இருக்கிறார்கள்.
தாலியை கழட்டி வீசிய அரசி
இந்த நிலையில், கடும் கோபத்தில் வெளியில் வந்த பாண்டியன் தன்னுடைய மகளை தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அதற்கு முதல் தன்னுடைய பேத்தியை அனுப்ப விருப்பப்படாத ஆத்தா “போக வேண்டாம்..” எனக் கெஞ்சி பார்க்கிறார்.
ஆனாலும் கேட்காத அரசி, பாண்டியன் வந்து அழைத்தவுடன் தாலியை கழட்டி விட்டு செல்கிறார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குமரவேலுக்கு மனம் உடைந்து போகிறது.
என்ன தான் அவர் தவறு செய்தாலும், அரசி இல்லையென்றதும் அப்படியே உடைந்து நிற்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |