Pandian Stores 2: அண்ணன்களால் உடைந்த ராஜு திருமண ரகசியம்! மீண்டும் விரிசலில் பாண்டியன் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதியின் அண்ணன்கள் தாயின் வற்புறுத்தல் காரணமாக கோமதியின் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்துள்ளது.
தங்கையையும், அவரது குடும்பத்தையும் எதிரியாக நினைத்து பல இடையூறுகளை செய்த அண்ணன்கள் தங்கைக்காக காவல்நிலையம் ஏறியதுடன், நீதிமன்றத்திலும் சாட்சி கூறி தங்கை குடும்பத்தை வெளியே கொண்டு வந்தனர்.

இதனால் ஒன்று சேர்ந்த குடும்பத்தினர் தற்போது கோமதி வீட்டிற்கு விருந்திற்கு வந்துள்ளனர். இதில் சித்தப்பா மீண்டும் சண்டை இழுத்துள்ள நிலையில், கோமதி உண்மையை உடைத்துள்ளார்.
அதாவது ராஜீ, கதிர் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தது நான் தான் என்று கூறியது பாண்டியனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |