Serial update: இதெல்லாம் தேவையா? அரசி எடுக்கும் விபரீத முடிவு- அதிர்ச்சியில் குடும்பத்தினர்
காதல் விவகாரம் பாண்டியன் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளதால் அவர் விபரீத முடிவு எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பரபரப்பான சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த சீரியலில் அரசி, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என வீட்டில் கூறி விட்டு அவருடைய மாமா மகனுடன் சினிமா பார்க்க சென்றுள்ளார்.
இதனை நேரில் பார்த்த சரவணன் வீட்டில் அணைவரும் பார்க்கக் கூறி விடுகிறார். குமார்-அரசி இருவரும் காதலிக்கும் பொழுது பரிமாறிக் கொண்ட பொருட்களை அனைத்தையும் கோமதி எடுத்து உடைக்கிறார்.
இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு இவ்வளவு நாட்கள் நாடகம் போட்டியா? என மிகுந்த மனம் வறுத்தம் அடைகிறார். வீட்டிலுள்ள மருமகள்கள் மற்றும் மகன்களால் கூட எந்தவொரு ஆதரவும் கொடுக்க முடியவில்லை.
வீட்டில் நடப்பதை பார்த்துக் கொண்டு பாண்டியன் ஒரு பக்கம் இடிந்து போய் அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில், சரவணன் அரசியின் போனில் இருக்கும் அனைத்தையும் பார்த்து விடுகிறார். இருந்தாலும் வீட்டிலுள்ளவர்களால் அடுத்தடுத்து நடக்கும் விடயங்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
விபரீத முடிவுக்கு இதுவா காரணம்?
இப்படியொரு சமயத்தில் சுகன்யா அரசிக்கு உதவி செய்வதாக கூறுகிறார். ஆனால் அரசி,“நான் வீட்டில் அடி வாங்கும் பொழுது நீங்கள் எந்த உதவியும் செய்யவில்லையே..” எனக் கூறுகிறார்.
இவர், குமாரிடம் வீட்டில் நடந்த அனைத்தையும் கூற அவர், அரசியிடம் பேச வேண்டும் என்கிறார், அதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.
கோமதிக்கு கோபம் பொறுக்காமல் தனது அம்மா, அண்ணிமார்களிடம் சண்டைக்கு செல்கிறார். “இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் நடக்காது..” என வீண் பலி போட்டு பேசுகிறார். இப்படியெல்லாம் பிரச்சினைகள் வெடிப்பதால் அரசிக்கு குற்ற உணர்வு பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.
இப்படியாக இதுவரையில் செய்தி வெளியாகியுள்ளன. இது வரும் எபிசோட்கள் எப்படி இருக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
