முடிவிற்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவிற்கு வரப்போவதாக சொல்லி எடுத்துக் கொண்ட மொத்த குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்தக் கதையில் நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து அவரவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சினைகளை காட்சிகளாக காட்டி வருகிறார்கள்.
இந்த சீரியலில் தற்போது பல பிரச்சினைகளைத் தாண்டி ஆசையாக கட்டிய புதிய வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்நிலையில், அண்ணன் தம்பி எல்லாம் பல கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒவ்வொரு பக்கமாக பிரிந்து இருந்த குடும்பத்தினர்கள் அனைவரும் தற்போது ஒன்று கூடி இருக்கிறார்கள்.
இதனை வைத்துப் பார்க்கும் போது இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக கூறி வந்த நிலையில் தற்போது குடும்பமாக வெளியிட்ட புகைப்படம் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அந்தப் புகைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |