PAN CARD தொலைந்து விட்டதா? Duplicateக்கு எப்படி விண்ணப்பிப்பது?
PAN CARD தொலைந்து விட்டால் Duplicate PAN CARD எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவைப் பொறுத்த வரை பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆனால் இன்று தொழில்நுட்பத்தைக் கொண்டு மோசடி செய்யும் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை குறி வைக்கின்றனர்.
முதலில் பான் கார்டு தொலைந்துவிட்டால், உடனே காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் நமது பான் கார்டு வைத்து மோசடி கும்பல்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி?
TIN-NSDL போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலில் நீங்கள் பார்வையிட வேண்டும். அதில் Change or Correction in PanCard / Re Print of Pan Card in Existing Pan Data என்பதை தெரிவு செய்யவும்.
பின்பு உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து Submit கொடுக்கவும்.
இதற்பு பின்பு உங்களது மின்னஞ்சலுக்கு ஒரு டோக்கன் நம்பர் அனுப்பப்படும். குறித்த நம்பரை குறித்து வைத்துக்கொள்வது அவசியமாகும். ஏனெனில் பின்னர் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.
தொடர்ந்து உங்களின் புகைப்படம் மற்றும் கையெழுத்து இவற்றினை ஸ்கேன் செய்யப்பட்டு, அதனை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் முடித்த பின்பு, இரண்டு வாரங்களில் உங்களுக்கு பான் கார்டு உங்களது வீடு தேடிவரும். இவற்றினை செய்வதற்கு நீங்கள் சிரமப்பட்டால், அருகில் உள்ள கணினி மையத்திற்கு சென்று இதனை பதிவு செய்து பெற்றுக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |