அடிக்கடி டார்க் சாக்லேட் சாப்பிடுவீங்களா? ஆச்சரியமளிக்கும் உண்மை இதோ
இன்று பலரும் விரும்பி சாப்பிடும் டார்க் சாக்லேட் உடம்பிற்கு பல நன்மைகளை அளிக்கும் நிலையில், அதனை தெரிந்து கொள்வோம்.
டார்க் சாக்லேட் ஏன் சாப்பிட வேண்டும்?
இன்று பெரும்பாலான இளைஞர்கள், சிறியவர்கள் விரும்பி சாப்பிடும் மிக முக்கியமாக இருப்பது டார்க் சாக்லேட். இதில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதாம்.
டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றது. இவை வீக்கத்தை குறைக்க செய்கின்றது. மேலும் இதனை சாப்பிடுவதால் இதய ஆரோக்கத்தை மேம்படுத்து, ரத்த அழுத்த அளவை குறைக்கவும் செய்கின்றது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை மேம்படுத்தி கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கின்றது.
அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மூளையில் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றது
மன நிலை மற்றும் மன ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் டார்க் சாக்லேட் சருமத்திற்கும் நன்மை அளிக்கின்றது.
பால் சாக்லேட்டை விட டார்க் சாக்லேட்டில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதன் பொருள் இரத்த சர்க்கரை அளவு மெதுவாக உயர்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் டார்க் சாக்லேட் பசியை குறைக்கவும், எடை மேலாண்மைக்கும் உதவுகின்றது.
டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ரீபயாடிக்குகள், நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் செரிமானத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |