ஒரே பனைமரத்தில் 16 கிளைகள்... ஊர் மக்களை வாயடைக்க வைத்த அதிசயம்!
உலகில் பலவிதமான அதிசயங்கள் அன்றாடம் நடைபெறுவது உண்டு. ஆனால், இதில் பார்க்கபோகிற அதிசயம் ஊர் மக்களை வியக்க வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை சேர்ந்த கல்யாணபுரம் கிராமத்தில் உள்ள விவசாய மரத்தில் 2 பனை மரங்கள் உள்ளது. மொத்தம் 3 பனை மரங்கள் இருந்த நிலையில் ஒன்று அழிந்துபோனது.
இதனிடையே தற்போது உள்ள 2 மரங்களில் ஒரு மரத்தில் ஆறு கிளைகளும், மற்றொரு மரத்தில் 16 கிளைகளும் உள்ளன.
இந்த 16 கிளைகள் கொண்ட தனியொரு மரமே தோப்பு போன்று காட்சி அளிக்கிறது. இருந்தாலும் இந்த 3 மரங்களுமே இதுவரையில் காய் காய்த்தது இல்லை என்பது வேதனையான ஒன்று.
இந்த அதிசய பனை மரங்களில் இருந்து புதிய மரக்கன்றுகளை உருவாக்க முடியவில்லையே என்பது கிராமத்தினரின் ஆதங்கமாக இருக்கிறது.