என்றென்றும் இளமையா.. ஆரோக்கியமா இருக்கணுமா? பழைய சோறு சாப்பிடுங்க
தற்போது இருக்கும் கோடை வெயிலுக்கு உங்கள் உடலுக்கு பலரும் பல விதமான பழங்களையும், பி சாறுகளையும் குடித்து வருவார்கள்.
ஆனால் பழைய சோறை யாரும் விரும்ப மாட்டார்கள். இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்கு பழைய சோறுதான் சிறந்தது. எமது முன்னோர்களின் வாழ்நாளை அதிகரித்து வாழ்ந்ததிற்கு காரணமும் இந்த பழைய காரணம் தான் காரணம்.
சில வருடங்களுக்கு முன், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டியிருக்கின்றனர்.
அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்ட பழைய சோற்றின் நன்மைகள்
பழைய சாதத்தில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, வயிறை லேசாக வைத்திருப்பது போல உணர வைக்கும்.
பழைய சோறில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன.
வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு இன்னும் அதிக சத்து கிடைக்கும்.
புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.
வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.
உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.
காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.
ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.
முழு நாளைக்கும் நம்மை புத்துணர்ச்சி உணரவைக்கும்.