நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர் வேம்புவிற்கு மருந்தாக மாறிய பழைய சோறு!
ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஸ்ரீதர் வேம்புவின் உடல் நலம் திரும்பியதற்கு பழைய சோறுதான் காரணம் என டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு
மிகப்பெரிய தொழிலதிபரும், சோஹோ நிறுவனத் தலைவருமான ஸ்ரீதர் வேம்பு இந்திய பணக்காரர்களில் இவரும் ஒருவராவார். இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவர் கல்விக்காக பெரும் பாடுபட்டவர். மேலும், உயர் கல்வி பெறமுடியாத/ பெறாத கிராமப்புற மாணவர்களுக்காக தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டுக் கல்விக்காக சோஹோ பள்ளிகளை நிறுவியவர்.
மேலும், இவரின் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் பலர் கல்லூரிகளில் பட்டம் பெறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய சோறின் மகத்துவம்
ஸ்ரீதர் வேம்பு கடந்த சில நாட்களாக தனது காலை உணவாக பழைய சோறுதான் உண்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
சில ஆண்டுகாலமாக எனது காலை உணவாக பழைய சோறு மாறியிருக்கிறது. எனது பாரம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்துக் கொண்டுள்ளேன்.
My daily breakfast for the past year has been fermented "old rice" (பழைய சோறு in Tamil). I religiously adhere to this diet. I suffered from IBS (irritable bowel syndrome) all life and that is now gone. I also suffer a lot less from allergies. Hope this helps some fellow sufferer.
— Sridhar Vembu (@svembu) February 12, 2023
எனக்கு பல காலமாக எரிச்சலுடன் குடல் பிரச்சினை (இர்ரிடபிள் பவுள் சின்ட்ரோம் -ஐபிஎஸ்) நோய் இருந்தது.
ஆனால் அந்த நோய் தற்போது குணமடைந்துவிட்டது. பல ஒவ்வாமைகளும் இருந்தன. அவைகளும் இல்லை. ஒருவேளை இந்த பதிவு சிலருக்கு உதவலாம் என்று பதிவிட்டிருந்தார்.