Palak keerai ulli karam: அனீமியா நோயை வரவிடாமல் தடுக்கும் பாலக்கீரை உள்ளி காரம்
அதிகம் இரும்பு சத்து நிறைந்துள்ள பாலக்கீரையை எமது முன்னோர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வார்கள்.
தற்போது இந்த பழக்கம் அருகி வருவதால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது.
எமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி பாலக்கீரை சமைத்து கொடுக்கும் படி அறிவுறுத்துவார்கள். ஏனெனின் உடலை வலிமைப்படுத்தும் காய்கறிகளில் பாலக்கீரை முதல் இடம் பிடிக்கிறது. பசலை என அழைக்கப்படும் இந்த கீரையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துக்களும் உள்ளன.
மேலும் இதில் மார்பக புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய போலிக் அமிலம், ப்ளவனாய்டுகளும் அதிகம் உள்ளன.
இவ்வளவு சத்துக்கள் நிரம்பிய பசலையை வாரத்திற்கு இரண்டு முறை சரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அத்துடன், பசலை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வரவிடாமல் தடுக்கிறது.
இவ்வளவு ஆரோக்கிய பலன்களை கொடுக்கும் பசலையை வைத்து ஆந்திரா ஸ்டைலில் பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாலக்கீரை – ஒரு கட்டு
- பெரிய வெங்காயம் – 3
- பூண்டு – 10 பற்கள்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மல்லித்தூள் – அரை ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- புளி – சிறு நெல்லிக்காய் அளவு
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- வரமிளகாய் – 2
- பூண்டு – 10 பல்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி
ஆந்திராவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்றாக பாலக்கீரை உள்ளி காரம் உணவை தயாரிக்க முதலில் ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
அதில் வெங்காயம், பூண்டு, காரம், மிளகாய், மல்லித்தூள், சீரகம், புளி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைப்பதற்கு கடினமாக இருந்தால் தண்ணீர் கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளலாம்.
பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, பூண்டு பற்கள், சீரகம் மற்றும் வரமிளகாள் கிள்ளி போட்டு நன்றாக வதங்க விடவும்.
வதங்கியதும், கழுவி சுத்தம் செய்த பாலக்கீரையை அதனுடன் சேர்த்து நன்றாக வதங்க விடவும். அதன் பின்னர் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை வெங்காயத்துடன் சேர்க்கவும். இவை அனைத்தையும் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதங்க விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதங்க விடவும்.
10 நிமிடங்களுக்கு பின்னர் பார்க்கும் பொழுது, பாலக்கீரை தனியாகவும் எண்ணெய் தனியாகவும் பிரிந்து வரும். அந்த சமயத்தை அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பாலக்கீரை உள்ளி காரம் தயார்! இதனை ஒரு வாரம் வரை சேமித்து வைத்து சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |