14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா?
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடையாளமாக பல இடங்கள் இருக்கின்றன.
உதாரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், வள்ளுவர் கோட்டம், எல்ஐசி, மெரினா கடற்கரை உள்ளிட்டவைகளை கூறலாம்.
சுற்றுலாத்துறை என பார்க்கும் பொழுது சென்னைக்கு தான் அதிகமானவர்கள் வருகை தருகிறார்கள். ஏனெனில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிச் செய்த காலத்தில் சென்னை “மெட்ராஸ் ” என அழைக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் சென்னையில் வாழ்ந்த மன்னர்கள் பற்றி பெரிதாக யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
ஆற்காடு நவாப் குடும்பத்தினர்
அந்த வகையில் சென்னையில் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும் அவர்களின் தற்போது நிலை என்ன? என்பது பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சென்னை - ராயப்பேட்டையில் சுமாராக 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. இந்த அரண்மனையில் அக்காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆற்காடு நவாப் ஆட்சி செய்த போது சென்னையில் பல இடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அப்போது அவர்கள் சென்னை கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் 1768 - 1855 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து 1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களில் வாரிசு இழப்புக் கொள்கையின் பிரகாரம் ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சென்றது.
அந்த சமயத்தில் திருவல்லிக்கேணி பிரதான சாலையில் “ஷாதி மஹால்” என்ற சிறிய இடத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தனர்.
இன்றும் வாழும் அரச குடும்பம்
1798 ஆம் ஆண்டு “இந்தோ சர்செனிக்” முறையில் கட்டப்பட்ட அமீர் மஹாலை ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி வந்தனர்.
பின்னர் ஆங்கிலேயருடன் நல்ல உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டதன் விளைவாக ராயபேட்டையில் இருக்கும் “அமீர் மஹால்” என்ற பெரிய அரண்மனையை ஆற்காடு நவாப்பிற்கு கையளித்தனர்.
அன்று முதல் இன்று வரை நவாப் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். தற்போது “முகமது அப்துல் அலி நவாப் ” என்பவர் ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.
இதனிடையே அவர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்த “சேப்பாக்கம் அரண்மனை” அரசு உடமையாக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசின் அலுவலகமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |