வீட்டில் சூடாக பஜ்ஜி செய்து சாப்பிட்ட தாய், மகன்! சிறிது நேரத்தில் உயிரிழந்த சோகம்
இந்தியாவில் பஜ்ஜி சாப்பிட்ட தாய் மகன் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஹீதளி கிராமத்தில் வசிப்பவர் பார்வதி(55), இவரது மகன் சோமலிங்கப்பா(28). இருவரும் தோட்ட வேலை செய்து வருவதுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல் வேலை முடித்து வீட்டிற்கு வந்த பார்வதி, சுடச்சுட பஜ்ஜி செய்து மகனுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளனர். பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்தில் இரண்டு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மயங்கி இருப்பதை அவதானித்த அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
பஜ்ஜி சாப்பிட்டு தாய், மகன் உயிரிழந்த சம்பவம் தற்போது மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
