விஜய் அலுவகத்தில் வாயில் பரோட்டாவுடன் இறந்து கிடந்த நபரால் பரபரப்பு... என்ன நடந்தது?
நடிகர் விஜயின் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து உள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ஒரு மாதமாக பெயிண்டிங் வேலை சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வேலையை பிரபாகரன் என்பவர் செய்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காணச்சென்ற பிரபாகரன் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு விஜயின் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்.
பரோட்டாவுடன் இறந்து கிடந்த பிரபாகரன்
அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாக கோரி 100 ரூபாய் பணத்தை பெற்று ஓட்டலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பின் மறுநாள் காலையில் அலுவலக வளாகத்தினுள் சுவரை ஒட்டி கையிலும் வாயிலும் பரோட்டா இருந்த நிலையில் பிரபாகரன் இறந்துகிடந்தார்.

இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
விசாரணையில், குடிபோதையில் இருந்த பிரபாகரன் பரோட்டா சாப்பிட்டதில் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடல்கூறு ஆய்வுகளின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.